ஆணையரின் உத்தரவை கண்டுக்காத ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் பஸ் ஸ்டாண்டில் கொடி கட்டி பறக்கும் ஆளுங்கட்சி அதிகாரம்
ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் மக்களுக்கு தேவையான கடைகள், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகளை ஆக்கிரமித்து, தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக நடைபாதை, கட்டண கழிப்பிடம் அருகில் தள்ளுவண்டி கடைக்காரர்கள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பஸ்கள் வருவதை கூட அறியாமல், ஆபத்தான முறையில் மக்கள் அந்த கடைகளில் நிற்கின்றனர். அதேபோல பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பஸ்களுக்கு போதிய வழிகள் இல்லாததால், டிரைவர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டில் ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தாலும், ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் மீண்டும் தொடர செய்கிறது. இது தொடர்பாக நமது நாளிதழில் தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்நிலையில்தான் புதிதாக கமிஷனராக பொறுப்பேற்ற அர்பித் ஜெயின் ஆய்வுகளை மேற்கொண்டார். ஆனாலும் பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் வெளியேறவில்லை.
இந்நிலையில் நேற்று மீண்டும் பஸ் ஸ்டாண்டில் ஆணையர் ஆய்வு நடத்தினார். அப்போது வழக்கம்போல கட்டண கழிப்பிடம் அருகில், நடைபாதைகளில் தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டதை பார்த்து, கடைகளை உடனடியாக அகற்றவும், அந்த பகுதிகளில் பேரிகார்டுகளை வைக்கவும் உத்தரவிட்டு சென்றார்.
அப்போதைக்கு தள்ளுவண்டி கடைக்காரர்கள் கடைகளை எடுத்து சென்றனர். அவர் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் வண்டிகளை கொண்டு வந்து வியாபாரத்தை தொடங்கினர். ஆளுங்கட்சியினரின் ஆதரவே இதற்கு காரணம் என்பது தெரிய வருகிறது. மாநகராட்சி கமிஷனர் உத்தரவுக்கு மதிப்பில்லாத நிலைதான் உள்ளது என்றும் மக்கள் தரப்பில் குமுறல் எழுந்துள்ளது.
மேலும்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்