விபத்தில் சிக்கியவர் சாவு



கோபி, கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 30, கட்டட தொழிலாளி; கோபி-அத்தாணி சாலையில் பைக்கில் சென்றபோது வேகத்தடையை அறியாமல் ஏறி இறங்கியபோது, நிலைதடுமாறி பைக்குடன் விழுந்து பலத்த காயமடைந்தார்.


மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து அவரின் மனைவி, விஷ்ணுப்பிரியா, 22, புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement