சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக்கொலை

சிவகங்கை:சிவகங்கை அருகே நேற்று முன்தினம் இரவு இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்தவர் செல்லச்சாமி மகன் மனோஜ்பிரபு 29. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்த நிலையில் இவரது குடும்பம் சிவகங்கை காமராஜர் காலனியில் வசித்தது.
நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் ஹரிஹரன், அஜித் ஆகியோருடன் டூவீலரில் இடையமேலுாரில் நடந்த இன்னிசை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 9:30 மணிக்கு வீடு திரும்பினர். புதுப்பட்டி அருகே வந்தபோது நம்பர் பிளேட் இல்லாத காரில் வேகமாக வந்த கும்பல் மனோஜ்பிரபு டூவீலரின் பின்னால் மோதியது. இதில் கீழே விழுந்த மனோஜ்பிரபுவை அந்த கும்பல் வாளால் வெட்டி கொலை செய்தது. தடுக்க சென்ற ஹரிஹரன், அஜித்தை மிரட்டினர். அருகில் இருந்தவர்கள் சிவகங்கை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மனோஜ்பிரபு உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
மனோஜ்பிரபுவின் தந்தை செல்லச்சாமி சிவகங்கை போலீசில் தமராக்கியை சேர்ந்த பாண்டி மகன் அபிமன்யு, மூக்கன் மகன் முருகன், மச்சக்காளை மகன் மணி, ஆறுமுகம் மகன் முனீஸ்வரன் உள்ளிட்ட மேலும் 4 பேர் சேர்ந்த தனது மகனை கொலை செய்ததாக புகார் அளித்தார்.
மறியல் போராட்டம்
நேற்று காலை 10:30 மணிக்கு சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் மனோஜ்பிரபு உறவினர்கள் கூடினர். மனோஜ் பிரபுவை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., அமலஅட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவதாக உத்தரவாதம் அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.
மகளை கொன்றவர்கள்
மனோஜ்பிரபு தந்தை செல்லச்சாமி கூறுகையில், எனது மகளை தவறுதலாக போட்டோ பதிவிட்டு இந்த நபர்கள் ஏற்கனவே கொன்று விட்டார்கள்.
இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. என் மகன் ஊரில் இருந்து பொங்கலுக்கு தான் வந்தார். வந்ததில் இருந்து எங்கும் செல்லமாட்டார். வீட்டில் தான் இருப்பார். நான் எங்கேயும் போக விடமாட்டேன். நேற்று முன்தினம் இரவு இடையமேலுாரில் திருவிழாவிற்கு எனக்கு தெரியாமல் சென்று விட்டார். விழாவிற்கு சென்று திரும்பும் போது அபிமன்யு உள்ளிட்ட 8 பேர் எனது மகனை வெட்டி கொலை செய்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்யவேண்டும் என்றார்.
தங்கையுடன் காதல்
போலீசார் கூறுகையில், மனோஜ்பிரபு தங்கையும் அபிமன்யுவும் காதலித்துள்ளனர். அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் முடிந்ததால் ஆத்திரம் அடைந்த அபிமன்யு அந்தபெண்ணை காதலித்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனால் திருமணம் நின்று விட்டது. அந்த பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்மந்தமாக அபிமன்யு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் மனோஜ்பிரபு உள்ளிட்டோர் அபிமன்யு தந்தை தங்கபாண்டியை தாக்கியுள்ளனர். இதில் வழக்கு பதியப்பட்டு இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மனோஜ்பிரபு குடும்பத்தினர் சிவகங்கை காமராஜர் காலனியில் குடும்பத்துடன் குடியேறினர். மனோஜ்பிரபுவும் வெளிநாடு சென்றுவிட்டார்.
@block_P@பாஸ்போர்ட் ஒப்படைப்புblock_P
@block_P@block_P
வெளிநாடு சென்றவர் சில மாதங்களுக்கு முன்பு வந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரது பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு ஜாமீனில் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இடையமேலுார் திருவிழாவிற்கு சென்று வரும் போது கொலை செய்யப்பட்டுள்ளார்.
டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையிலான போலீசார் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர் என்றனர்.
மேலும்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!