இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் கஞ்சா பறிமுதல்: தொண்டியில் இருவர் கைது

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகமாக கடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு எஸ்.பி.பட்டினம் அருகே தீர்த்தாண்டதானம் கடற்கரையில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசுக்கு தெரிவித்தனர். எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த சாக்கு மூடையில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள 78 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் மீமசல் தெற்கு தெருவை சேர்ந்த மாது 31, தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்த சமயக்கண்ணு 24, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இலங்கைக்கு கஞ்சா கடத்த , படகை எதிர்பார்த்து காத்திருந்ததாக தெரிவித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு