சிங்கம்புணரியில் ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நாடார்பேட்டை தெருவை சேர்ந்தவர் சரவணன் 55, அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி நிர்மலாதேவி அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிகிறார்.
ஜூலை 4 ஆம் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் கதவை பூட்டி துாங்கினர்.
காலையில் எழுந்து பார்த்தபோது பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு அறைகளில் பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.14 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே செய்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சரவணன் அளித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை
Advertisement
Advertisement