நோக்கம் நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டேன்

4

என் குழந்தைகளின் படிப்புக்காக, கனடாவில் வசித்து வந்த நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு முன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என் தந்தை வைகோவை கவனித்துக் கொள்வதற்காக தான் இந்தியா வந்தேன். வயதான காலத்தில் பெற்றோரை கவனித்துக் கொள்வது, குழந்தைகளின் அடிப்படை கடமை. மாறாக, அரசியலில் குதிக்கும் எண்ணம் எனக்கு துளிகூட இருந்ததில்லை. என் தந்தை மீது, கட்சியினர் வைத்துள்ள பாசத்தின் வலிமையை உணர்ந்து, அதற்கு மதிப்பளிக்கும் நோக்கில் தான் கட்சிக்கு வந்தேன். நான் அரசியலுக்கு வந்தது விபத்து தான். ஆனால், நோக்கத்தை நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டேன்.


ம.தி.மு.க., துவங்கி, 31 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கட்சிக்கான சுய மரியாதை, அங்கீகாரத்தை பெற்றே தீர வேண்டும். அதற்கு, சட்டசபை தேர்தலில், அதிக 'சீட்' வாங்கியே ஆக வேண்டும். பின், வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

- துரை வைகோ,

முதன்மை செயலர், ம.தி.மு.க.,

Advertisement