'காவலர்களுக்கு வார விடுமுறை; முதல்வரிடம் எடுத்து கூறுவேன்'

1

வேலுார் : வேலுார் மாவட்டத்திலுள்ள தி.மு.க., ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம், வேலுாரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.


இதில், தி.மு.க., இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி கலந்து கொண்டார். அவருக்கு, வேலுார் மாவட்ட இளைஞரணி சார்பில், 'முருகன் வேல்' பரிசாக வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், ''வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என, தலைவர் கூறியுள்ளார். ஆனால், 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு கட்சியின் இளைஞரணியினர் உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால், 234 ஒன்றும் சாத்தியமில்லாத எண் அல்ல. 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பரப்புரை மூலம், வீடு, வீடாக பொதுமக்களை சந்தித்து, அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி, உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி:

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வில் இளைஞர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.


தமிழக போலீசில், காவலர்களுக்கு வார விடுப்பு வழங்கும் முறையை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது. அதை, கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என, முதல்வரிடம் எடுத்துக் கூறுவேன். ஓய்வில்லா பணியும் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement