த.வெ.க., ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் திடீர் அனுமதி

சென்னை : திருப்புவனம் அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு, சென்னை சிவானந்தா சாலையில், வரும் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழக வெற்றிக் கழகத்திற்கு, சென்னை போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்புவனத்தில், மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், நான்கு ஆண்டுகளில் நடந்த 24 காவல் நிலைய மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் வலியுறுத்தி, த.வெ.க., சார்பில் இன்று, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அன்றைய தேதியில் வேறு காரணத்திற்காக அந்த இடம் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறி, காவல் துறையால் மாற்று இடம் வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, சிவானந்தா சாலையில் வரும் 6 ம்தேதி காலை 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு ஆனந்த் கூறியுள்ளார்.

Advertisement