ஓய்வறையில் இறந்து கிடந்த பெண் எஸ்.எஸ்.ஐ.,

ராசிபுரம் : நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளியை சேர்ந்தவர் விஜயகுமார், 53. இவரது மனைவி காமாட்சி, 48, என்பவர், ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.

காமாட்சி, 40 நாட்கள் மருத்துவ விடுப்பு முடிந்து, கடந்த வாரம் பணியில் சேர்ந்தார். நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியை முடித்துவிட்டு, அதிகாலை, 2:00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். பின், முதல் மாடியில் உள்ள ஓய்வறையில், ஓய்வெடுக்க சென்றார். நேற்று காலை, 11:30 மணி வரை ஓய்வறை கதவு திறக்கவில்லை.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே கமாட்சி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பேளுக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement