விஷமாக்கப்படும் தென்பெண்ணை நதி

தென்பெண்ணை
காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி என மேவிய யாறு பலவோட திருமேனி செழித்த தமிழ்நாடு என்று பாரதி புகழ்ந்து பாடிய ஆறுகளில் தென் பெண்ணை ஆறும் ஒன்று.
இந்த ஆறு கர்நாடகா மாநிலம் நந்திபூர் மலைப்பகுதியில் துவங்குகிறது பின் தமிழகத்தின் ஒசூர் வழியாக நுழைந்து திருவண்ணாமலை,கடலுார்,விழுப்புரம் மாவட்டத்தை செழிப்பாக்கிய பின் கடலில் கலக்கிறது,நீண்ட காலமாக இது நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.
மழைக்காலத்தில் மட்டுமே அதுவும் நந்திபூர் மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவை வைத்தே இந்த ஆறு ஒடுகிறது வருடம் முழுவதும் இல்லாவிட்டாலும் வஞ்சனை இல்லாமல் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் அப்படி வரக்கூடிய, பெறக்கூடிய தண்ணீரை வைத்தே தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடக்கிறது.
ஆனால் இதில் இப்போது பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எப்போது மழைக்காலத்தில் தண்ணீர் பெருகி வருகிறதோ அப்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலை அதிபர்கள் எல்லாம் தாங்கள் தேக்கிவைத்திருந்த ஆலைக்கழிவுகளை மொத்தமாக தமிழகம் நோக்கிவரும் மழை நீரில் கலந்துவிடுகின்றனர்.
இதனால் மழை நீர் ரசாயணமாகி நுரையோடும் துர்நாற்றத்தோடும் வருகிறது, மழை நீரின் தன்மை,நிறத்தை,மணத்தை எல்லாம் இழந்து ஆறு சாக்கடையாகவே தமிழகத்திற்குள் நுழைகிறது.
இதனால் இந்தப் பகுதியின் குடிநீர் ஆதாரமாக இருந்த இந்த தென்பெண்ணை ஆற்று நீர் இப்போது பக்கத்தில் கூட நெருங்கமுடியாத அளவிற்கு விஷமாகிவிட்டது.
கொஞ்சமும் மனித நேயம் இல்லாமல் மனதில் வன்மம் கொண்டவர்களால் மட்டுமே இப்படி எல்லாம் செய்யமுடியும்,செய்கிறார்கள்.இத்தனைக்கும் ஆலைக்கழிவுகளை நீரில் கலக்கவிடாது தடுக்கும் அமைப்புகள், தப்பித்தவறி ஆலைக்கழிவுகள் கலந்துவிட்டால் அதைச் சுத்திகரித்து துாய்மைப்படுத்தும் நிலையங்கள் எல்லாம் கர்நாடக மாநில அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது ஆனால் யாரையும், எதையும் கட்டுப்படுத்துவது இல்லை, இந்த தண்ணீரை நாமா உபயோகிக்கப்போகிறோம் என்ற மனநிலை உள்ளவர்களால் மட்டுமே இது சாத்தியம்.
நன்றாக செழிப்பாக இருந்த ஒரு ஆறு தங்கள் கண்முன்னே மாசடைந்து ஓடுவதைக் காணும் விவசாயிகளும் பொதுமக்களும் ஆற்றின் அவலத்தை எண்ணி பெருங்குரலெடுத்து அழுகின்றனர்.
இந்த அழுகுரல் ஆட்சியாளர்கள் காதில் கேட்குமா?
-எல்.முருகராஜ்.
மேலும்
-
கிடப்பில் சாலை சீரமைப்பு பணி திருமழிசை பகுதி மக்கள் சிரமம்
-
நான்கு வழிச்சாலை மைய தடுப்பில் பூச்செடிகள் வைக்கும் பணி மும்முரம்
-
பூண்டி நீர்த்தேக்கத்தில் பூங்கா பணி நிறைவு
-
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா: வாகன ஓட்டிகள் திணறல் பயணம்
-
கன்னியம்மன் குளம் ஆக்கிரமிப்பு அகற்றி சீரமைக்க வேண்டுகோள்
-
பன்றி பண்ணையால் சீர்கேடு அழிஞ்சிவாக்க மக்கள் போராட்டம்