ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது: கானா பார்லி.,யில் பிரதமர் மோடி பெருமிதம்

5

புதுடில்லி: '' ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது. ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டும் அல்ல. அது நமது அடிப்படை விழுமியங்களின் ஒரு பகுதி,'' என கானா நாட்டு பார்லிமென்டில் பிரதமர் மோடி பேசினார்.


@1br

பாக்கியம்






கானா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியதாவது: இந்த பெருமை மிக்க அவையில் பேசுவதை நினைத்து பெருமைப்படுகின்றேன். ஜனநாயகத்தின் ஆன்மாவை பரப்பும் கானாவில் இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள் மற்றும் நல்லெண்ணத்தை கொண்டு வந்துள்ளேன். தங்கத்தின் நிலம் என கானா அறியப்படுகிறது. இது மண்ணுக்கு அடியில் இருப்பதை வைத்து சொல்லப்படவில்லை. உங்கள் மனதில் உள்ள அரவணைப்பு மற்றும் வலிமைக்காகவும் கூறப்படுகிறது.



ஆதரவு





ஆப்ரிக்கா கண்டத்தில் நம்பிக்கை ஒளியாக கானா திகழ்கிறது . கானா மக்கள் சவால்களை நம்பிககையுடன் எதிர்கொள்கின்றனர். இந்தியா - கானா இடையிலான பிணைப்பு தொன்மையானது. மனிதநேயமே இந்தியாவின் முதன்மையான தத்துவம். 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியது. வளமான மற்றும் ஆக்கப்பூர்வமான எதிர்காலம் அமைய ஆப்ரிக்காவின் வளர்ச்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.

நன்றி



நேற்று மாலை மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எனது நண்பர், கானா அதிபர் ஜான் மஹாமாவிடம் இருந்து உங்களின் தேசிய விருதை பெற்றது ஒரு கவுரவம். 140 கோடி இந்தியர்கள் சார்பில் இந்த கவுரவத்துக்காக கானா மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். கானா மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட டாக்டர் க்வாமே குருமாஹவுக்கு இன்று மரியாதை செலுத்தினேன். நம்மைப் பிரிக்கும் மேலோட்டமான தாக்கங்களை விட , நம்மை ஒன்றிணைக்கும் சக்திகள் மிகப்பெரியவை என்று அவர் ஒரு முறை கூறியுள்ளார். அவரது வார்த்தைகள் இன்றும் நம்மை வழிநடத்தி வருகின்றன.

இந்தியா பங்களிப்பு



இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலக நாடுகளின் வரிசை வேகமாக மாறி வருகிறது. தொழில்நுட்பத்தின் புரட்சி, உலகின் தெற்கு பகுதிகளின் எழுச்சி, புவியியல் அரசியல் மாற்றம் ஆகியவை அதற்கு முக்கிய பங்காற்றுகின்றன. சர்வதேச நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்பதை மாறி வரும் சூழ்நிலைகள் எடுத்துரைக்கின்றன. உலகின் தெற்கு பகுதிக்கு குரல் கொடுக்காமல் வளர்ச்சி பெற முடியாது. இந்தியாவை 2047 க்குள் வளர்ந்த நாடாக மாற்ற இந்திய மக்கள் உறுதி பூண்டுள்ளனர். வளர்ச்சியடைந்த மற்றும் ஸ்திரமான உலகத்துக்கு வலிமையான இந்தியா பங்களிக்கும்.



காரணம்





ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது. ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டும் அல்ல. அது நமது அடிப்படை விழுமியங்களின் ஒரு பகுதி. இந்தியாவில் 2,500க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. பல்வேறு மாநிலங்களை 20 கட்சிகள் ஆட்சி செய்கின்றன. 22 அதிகாரப்பூர்வ மொழிகள், ஆயிரக்கணக்கான பேச்சுவழக்குகள் உள்ளன. இந்தியாவிற்கு வந்த மக்கள் எப்போதும் திறந்த இதயத்துடன் வரவேற்பதற்கு இதுவே காரணம்.



@quote@ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வைஷாலி போன்ற மையங்கள் இருந்த உதாரணங்கள் நம்மிடம் உள்ளன. உலகின் மிகவும் பழமையான வேதங்களில் ஒன்றான ரிக் வேதம், ' அனைத்து திசைகளில் இருந்தும் நல்லெண்ணம் வரட்டும்,' எனக்கூறியுள்ளது. quote

இனிமையானது



இந்தியா மற்றும் கானாவின் வரலாறு காலனித்துவ ஆட்சியின் சுவடுகளை தாங்கி நிற்கின்றன. இதனால், நமது ஆன்மா எப்போதும் சுதந்திரமாகவும், அச்சமற்றதாகவும் உள்ளது. நமது வளமான பாரிம்பரியத்தில் இருந்து நாம் வலிமையையும், உத்வேகத்தையும் பெறுகிறோம். நமது நட்பு உங்கள் புகழ்பெற்ற சர்க்கரை ரொட்டி அன்னாசிப்பழத்தை விட இனிமையானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement