பைனல் செல்லுமா திண்டுக்கல் * சேப்பாக்கம் அணியுடன் பலப்பரீட்சை

திண்டுக்கல்: டி.என்.பி.எல்., தகுதிச்சுற்று 2ல் இன்று திண்டுக்கல், சேப்பாக்கம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., 'டி-20' தொடரின் 9வது சீசன் நடக்கிறது. 'டாப் -4' இடம் பிடித்த சேப்பாக்கம், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறின. அடுத்து நடந்த தகுதிச்சுற்று 1ல் வெற்றி பெற்ற திருப்பூர் அணி, நேரடியாக பைனலுக்கு முன்னேறியது.
'எலிமினேட்டர்' போட்டியில் திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல். இதையடுத்து, திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் இன்று நடக்கும் 'தகுதிச்சுற்று 2' ல் திண்டுக்கல், சேப்பாக்கம் அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்வி அடைந்தது திண்டுக்கல். பேட்டிங்கில் ஷிவம் சிங் (300 ரன்), கேப்டன் அஷ்வின் (275) என இருவரும் துவக்கத்தில் கைகொடுக்கின்றனர். தவிர விமல் குமார் (165), பாபா இந்திரஜித் (136) பேட்டிங்கில் உதவுகின்றனர். பவுலிங்கை பொறுத்தவரையில் அஷ்வின் (12 விக்.,), வருண் சக்ரவர்த்தி (10) என இரு சர்வதேச அனுபவம் வாய்ந்த 'சுழல்' கூட்டணி இருப்பது பெரும் பலம். தவிர 'வேகத்தில்' பெரியசாமி (11) விக்கெட் சாய்க்கலாம்.
சேப்பாக்கம் அணி லீக் சுற்றில் 7 போட்டியிலும் வென்றது. தகுதிச்சுற்று 1ல் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இன்று பாபா அபராஜித் (345), விஜய் சங்கர் (251), ஆஷிக் (200) கைகொடுக்க உள்ளனர். பவுலிங்கில் அபிஷேக் (13), லோகேஷ் (9), பிரேம் குமார் (9), சிலம்பரசன் (8) மறுபடியும் உதவ காத்திருக்கின்றனர்.
இன்று வெல்லும் அணி பைனலுக்கு (ஜூலை 6) முன்னேறலாம் என்பதால், 'விறுவிறு' மோதல் காத்திருக்கிறது.
மேலும்
-
கொள்ளையில் தொடர்பா? கமிஷனரிடம் பா.ஜ., புகார்!
-
'என்னடா இழுவை ஜாஸ்தியா இருக்கே...' :டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்: அரசு பஸ் படுத்துற பாடு தாங்க முடியல...
-
மூதாட்டிக்கு தொல்லை; பெயின்டருக்கு 'கம்பி'
-
மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்'
-
மீடியனில் மோதிய பைக்; இரு நண்பர்கள் உயிரிழப்பு
-
தண்டவாளத்தில் மண் சரிவு; ரயில்கள் தாமதமாக இயக்கம்