தமிழக கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.43,000 கோடியாக அதிகரிக்க இலக்கு

சென்னை:தமிழகத்தில் இருந்து கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியை, தற்போதுள்ள 7,000 கோடி ரூபாயில் இருந்து 43,000 கோடி ரூபாயாக அதிகரிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக, 7,000 கோடி ரூபாயாக உள்ளது. இதை பல மடங்கு அதிகரிக்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

இதற்காக, இந்த துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், 'கடல்சார் உணவு பொருட்கள் பதப்படுத்தும் கொள்கை'யை அரசு வெளியிட உள்ளது.

இதுதொடர்பாக, தொழில் துறை அமைச்சர் ராஜா, தொழில் துறை செயலர் அருண்ராய், மீன்வளத் துறை செயலர் சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகள், சென்னையில் நேற்று முன்தினம், கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.


@block_B@

வலுவான கட்டமைப்பு




இதுகுறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜா வெளியிட்ட அறிக்கை:தமிழக கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியை 5 பில்லியன் டாலர், அதாவது 43,000 கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மீன்களை மட்டும் ஏற்றுமதி செய்வதை விரும்பவில்லை. அவற்றை மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வதே குறிக்கோள். தமிழக கடற்கரை முழுதும் நவீன பதப்படுத்தும் அலகுகள், குளிர்பதன கிடங்குகள், ஏற்றுமதிக்கான 'பேக்கிங்' உள்ளிட்ட முழு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இது, மீன்பிடி சமூகங்களுக்கு சிறந்த வருமானம், நிலையான வாழ்வாதாரம், வலுவான எதிர்காலத்தை உருவாக்கும். இதற்கென செயல் திட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.block_B



@block_B@

14 கடலோர மாவட்டங்கள்




தமிழக கடலோர மாவட்டங்கள் 1,076 கி.மீ.,மொத்த கடற்கரை நீளம் திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கி, கன்னியாகுமரியில் முடிவடைகிறது.

10.50 லட்சம்



கடல் உணவு பொருட்களை வாழ்வாதாரமாக கொண்டுள்ளவர்கள்.block_B

Advertisement