சிறு மழைக்கே குளமாகும் தெரு

ஆவடி, ஆவடி அடுத்த கோவில்பதாகை, திருமுல்லைவாயில் சாலை, ஸ்வாதி நகரில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மழைக்காலத்தில் இத்தெருவில் தேங்கும் வெள்ளம், திருமுல்லைவாயில் பிரதான சாலையில் வழிந்தோடி, பொன்னியம்மன் கோவில் குளத்தில் சென்றடைந்தது.

இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், திருமுல்லைவாயில் பிரதான சாலையில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. திட்டமிடலின்றி அதிக உயரத்தில் இச்சாலை அமைக்கப்பட்டதால், ஸ்வாதி தெரு பள்ளமாக மாறியது. இதனால், லேசான மழை பெய்தாலே வெள்ளம் தேங்கி நிற்கிறது.

மழைநீர் வடிகால்வாயும் இல்லாததால், நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு, தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

பருவமழைக்காலம் துவங்கினால் நிலைமை மேலும் மோசமாகி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement