அந்த்யோதயா உட்பட ஏழு ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை:திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. அதனால், அந்த்யோதயா உட்பட ஏழு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
l திருச்சி - கேரள மாநிலம், திருவனந்தபுரம் காலை 7:20 மணி விரைவு ரயில், வரும் 9ம் தேதி வள்ளியூர் வரை மட்டுமே இயக்கப்படும்
l தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா இரவு 10:40 மணி ரயில், வரும் 8, 9ம் தேதிகளில் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்
l மங்களூரு சென்ட்ரல் - கன்னியாகுமரி காலை 5:00 மணி விரைவு ரயில், வரும் 7ம் தேதி திருவனந்தபுரம் வரை மட்டுமே செல்லும்
l சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் மாலை 3:20 மணி விரைவு ரயில், வரும் 25ம் தேதி கோட்டயம் வரை மட்டுமே இயக்கப்படும்
l மதுரை - குருவாயூர் காலை 11:35 மணி விரைவு ரயில், வரும் 26ம் தேதி கோட்டயம் வரை மட்டுமே இயக்கப்படும்
l திருவனந்தபுரம் - திருச்சி காலை 11:35 மணி விரைவு ரயில், வரும் 9ம் தேதி வள்ளியூரில் இருந்து இயக்கப்படும்
l நாகர்கோவில் - தாம்பரம் மாலை 3:50 மணி அந்த்யோதயா விரைவு ரயில், வரும் 9ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
நாய் கவ்விச்சென்ற சிசு; போலீஸ் மீட்டு விசாரணை
-
தி.மு.க.,வினர் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டியதாக ஆடியோ வெளியிட்டு அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலை
-
பெண்ணிடம் ஆபாச சைகை; போலீஸ்காரரிடம் விசாரணை
-
ரூ.11,000 லஞ்சம் இருவர் சிக்கினர்
-
ப ழ விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாப பலி
-
பள்ளி மாணவனை கடத்தி கொன்ற இருவர் கைது; 'தாமத நடவடிக்கை' எனக் கூறி உறவினர்கள் மறியல்