ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம்



ஈரோடு,:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், 3 மற்றும் 4வது பிளாட்பார்ம் இடையே செயல்பட்டது. அம்ரித் பாரத் திட்டத்தில் நடைமேம்பாலம் அமைக்க, போலீஸ் ஸ்டேஷன் இருந்த இடம் தேர்வானது.


இதனால் போலீஸ் ஸ்டேஷனை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ரயில்வே காலனியில் இரு குடியிருப்புகள் போலீஸ் ஸ்டேஷனாக செயல்பட அனுமதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் இந்த குடியிருப்பில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் செயல்பட துவங்கியது.

Advertisement