அர்ஜுன் சம்பத்தை தடுத்த போலீசார்

மடப்புரம் வந்த ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அஜித்குமாரை கட்டி வைத்து அடித்த இடமான கோவில் அலுவலகம் பின்னால் உள்ள கோசாலைக்கு செல்ல முயன்ற போது, நீதிபதி விசாரணை நடந்து கொண்டிருப்பதால், யாருக்கும் அனுமதி இல்லை என போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அர்ஜுன் சம்பத் கூறுகையில், ''கோவில் வளாகத்தில் தான் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு உயிர் பறி போய் உள்ளது. ஐந்து நாட்களாகியும் கோவில் நிர்வாகம் பரிகார பூஜை செய்யவில்லை. உடனடியாக பரிகார பூஜை செய்ய வேண்டும்,'' என்றார்

Advertisement