அங்கீகரிக்கப்படாத கட்சி நீக்கத்துக்கு பரிந்துரை

ஈரோடு, இந்திய தேர்தல் ஆணையம், 345 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கை துவங்கி உள்ளது.

கடந்த, 2018 முதல், லோக்சபா, சட்டசபை பொது தேர்தல், இடைத்தேர்தல்களில் போட்டியிடாத கட்சிகள், இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகளை நீக்க திட்டமிட்டது.

இதன்படி ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான 'இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி', அதற்கான பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய தெரிவித்து கடிதம் அனுப்பியது. இதையடுத்து இக்கட்சியை நீக்கம் செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.

Advertisement