கரூரில் 4 நகர்நல வாழ்வு மையங்கள் காணொளி காட்சியில் முதல்வர் திறப்பு
கரூர்,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியும், புதிதாக கட்டப்பட்ட, நான்கு நகர நல வாழ்வு மையங்களை காணொளி காட்சி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின், கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி கூறியதாவது: தரமான மருத்துவ சேவை வழங்குவதற்காக, மருத்துவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கரூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட குளத்துப் பாளையத்தில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வெங்கமேடு வி.வி.ஜி.நகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அரிக்காரம்பாளையம், வடிவேல் நகர்,
திருக்காம்புலியூர், சணப்பிரட்டி என நான்கு இடங்களில் தலா, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நகர நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணி, மாநகர நல அலுவலர் கவுரிசரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பெரியப்பாவை கொன்றவர் கைது
-
பழநியில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்
-
ஆய்வுக்கூட்டத்தில் வாக்குவாதம்: பி.டி.ஓ., போலீசில் புகார்
-
பழநியில் நடிகை நயன்தாரா குடும்பத்துடன் தரிசனம்
-
திருப்புவனம் கல்வித்துறை அலுவலகத்திற்கு பூட்டு
-
108 சக்தி பீடங்களை தரிசிக்க சைக்கிளில் 17,800 கி.மீ., பயணம் செய்த சன்னியாசி; உத்தரகோசமங்கையில் சுவாமி தரிசனம்