தலைமை ஆசிரியர் பணியிடம் மாறுதல்; சோகத்தில் மாணவியர்

குளித்தலை, குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக அனிதா என்பவர் பணியில் இருந்தார். இவரது முயற்சியால், அனைத்து ஆசிரியர்கள் ஒற்றுமையுடன் மாணவியரை முழுமையான தேர்ச்சி விகிதம், அரசு அறிவித்த நிகழ்ச்சிகள் நடத்துவது, பல்வேறு போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் மாநில அளவில் பல பரிசுகள் பெற்றுள்ளது.


மேலும், பள்ளி மாணவியரிடம் கனிவாக நடந்து, ஆசிரியர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி அனைவரிடம் நன்மதிப்பை பெற்றார். மாவட்டத்தில் அதிகளவு சேர்க்கை மற்றும் நல்ல பண்புகள் பெற்றதால், தகைசால் பள்ளி என்ற பெயர் பெற்று, அதிகளவு நிதி பெற்று கூடுதல் வகுப்பறைகள் கட்டும் வாய்ப்பை பெற்றார்.
பள்ளியை சிறந்த வழியில் அழைத்துச் சென்ற பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா, தனது மகன் மேல் படிப்புக்காக தஞ்சை மாவட்டத்திக்கு இடம் மாறுதல் பெற்றுள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் மாறுதல் பெற்றதால் ஆசிரியர், மாணவியர் சோகத்தில் உள்ளனர். தற்போது உதவி தலைமை ஆசிரியர் பத்மாவதி, கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

Advertisement