அந்த நாள் ஞாபகம் வந்ததே; வயலில் இறங்கி நாற்று நட்ட உத்தரகண்ட் முதல்வர்

டேராடூன்: உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி, தமது சொந்த விளை நிலத்தில் இறங்கி நாற்று நட்டதோடு, ஏரோட்டியும் தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினார்.



உத்தரகண்ட் முதல்வராக இருப்பவர் புஷ்கர் சிங் தமி. இவருக்கு காதிமாவில் சொந்தமாக ஏராளமான வேளாண் நிலங்கள் இருக்கின்றன.


இந் நிலையில், தமக்கு சொந்தமான விளை நிலத்தில் இன்று இறங்கிய தாமி, தாம் ஒருவர் முதல்வர் என்றும் பாராமல் வயலில் உழவு பணிகளை மேற்கொண்டார். அங்குள்ள தொழிலாளர்களுடன் ஒன்று சேர்ந்து நாற்று நட்டார். பின்னர், ஏரோட்டியும் அங்குள்ளோரை ஆச்சரியப்படுத்தினார்.


இதுதொடர்பான போட்டோக்களை புஷ்கர் சிங் தமி, தமது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;


காதிமாவில் உள்ள எனது வயலில் நெல் நடவு செய்யும்போது விவசாயிகளின் உழைப்பு, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை அனுபவித்தேன். எனது பழைய நாட்களை நான் நினைவு கூர்ந்தேன். உணவை உற்பத்தி செய்பவர் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு மட்டுமல்ல, கலாசாரம், பாரம்பரியத்தின் அடையாளமும்கூட.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement