டில்லியில் ஏ.சி., மெக்கானிக் 3 பேர் மர்ம சாவு

புதுடில்லி: டில்லியில் ஏ.சி., மெக்கானிக் வேலை பார்த்த தொழிலாளர்கள் மூன்று பேர் வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு டில்லியின் தக்சின்புரி பகுதியில் உள்ள வீட்டில், ஏசி மெக்கானிக் வேலை பார்க்கும் 4 பேர் தங்கியிருந்தனர்.
அவர்களில் ஒருவரை போனில் அழைத்து அவரது சகோதரர், போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்து வீட்டில் வந்து பார்த்தார். அங்கு மூவர் இறந்து கிடந்தனர்.


சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது:

வீட்டின் முதல் மாடி அறையில் சென்று பார்த்த போது 4 ஆண்கள் மயக்க நிலையில் இருந்தனர்.

அவர்களை உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். பிறகு சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் அதிர்ச்சி மையத்திற்கு கொண்டு சென்றோம். இங்கு 4 பேரில் 3 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். ஹசீப் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இறந்தவர்கள் ஜிஷான், அவரது உறவினர்கள் இம்ரான் என்ற சல்மான் மற்றும் மொஹ்சின் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நால்வரும் ஏ.சி., மெக்கானிக் வேலை பார்த்து ஒன்றாக வசித்து வந்தனர். மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement