கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு நீதிமன்றம் தடை

18


பெங்களூரு: கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.


மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ' தக் லைப் ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், ' தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம்', எனப் பேசினார். அது கன்னட அமைப்புகளின் கோபத்தைத் தூண்டியது. கமல்ஹாசன் பேசியதற்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் 'தக் லைப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்றார்கள். கன்னட சினிமா வர்த்தக சபையும் படத்தை வெளியிட தடை விதிக்கிறோம் என்றார்கள். இது தொடர்பாக கமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.



இந்நிலையில் கன்னட சாகித்ய பரிஷத் என்ற அமைப்பு, '' கன்னடம் மொழி மற்றும் கலாசாரம் தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை விதிக்க வேண்டும், '' எனக்கூறி கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இதனை விசாரித்த நீதிபதி, ' கன்னடம் மொழி, கலாசாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க தடை விதித்ததுடன், மனு குறித்து ஆக.,30க்குள் பதிலளிக்க வேண்டும்,' என உத்தரவிட்டார்.

Advertisement