ஹிமாச்சலில் 14 இடங்களில் மேகவெடிப்பு: ரூ.700 கோடி இழப்பு

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் 14 இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டதால், உள்கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளதாக கூறியுள்ள அம்மாநில முதல்வர், இதனால் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஹிமாச்சலின் மண்டி, காங்ரா, சம்பா,சிம்லா உள்ளிட்ட மாவட்டங்களில் மேகவெடிப்பு காரணமாக கடந்த 1ம் தேதி முதல் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால், 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்தன; சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட ஏராளமான வாகனங்கள் மண்ணில் புதைந்தன.
அதிகரிப்பு
இந்நிலையில், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 40 பேரை காணவில்லை. 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை என முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறியுள்ளார்.
மேலும் அவர், மாநிலத்தில் 14 இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், மாநிலத்தின் உள்கட்டமைப்புகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. என தெரிவித்தார்.
மாநில அவசரகால நடவடிக்கை மையத்தின் கணிப்பின்படி மாநிலத்திற்கு ரூ.541 கோடி இருக்கலாம் என கணித்துள்ளது. ஆனால், சேதம் குறித்த தகவல் தொடர்ந்து வருவதால், இழப்பு ரூ.700 கோடி ஆக இருக்கும் என சுக்விந்தர் சிங் சுகு கூறியுள்ளார்.
கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மண்டி மாவட்டத்தில் 176 சாலைகள் மூடப்பட்டுள்ளன. வெள்ளத்தில் 14 பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்', 'ஆரஞ்சு அலர்ட் ' விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
சிரவை ஆதீனம் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம்
-
தமிழகத்தில் போலீசார் ஆட்சி :பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
-
காவல்துறை காவு வாங்கும் துறையாகி விட்டது
-
திருப்புவனம் நீதிமன்றத்திலும் விசாரணை தொடக்கம்
-
மடப்புரம் பிரச்னைக்கு காரணம் அறங்காவலர் குழு இல்லாததா
-
அஜித் குமார் கொலை வழக்கு வலைத்தளத்தில் களமிறங்கிய போலீஸ் குடும்பம்