போர் விமானத்தை என்ன செய்யலாம்: நாளை கேரளா வருகிறது பிரிட்டன் நிபுணர்கள் குழு!

திருவனந்தபுரம்: பழுதான நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பிரிட்டீஷ் கடற்படை போர் விமானத்தை, இங்கேயே வைத்து பராமரிப்பு பணியை செய்வதா அல்லது பிரிட்டன் கொண்டு செல்வதா என முடிவு செய்ய அந்நாட்டை சேர்ந்த பொறியாளர்கள் குழு நாளை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ், அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் இருந்து கடந்த 14ல் புறப்பட்ட எப்35 பி போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பில் இருந்த போது எரிபொருள் பற்றாக்குறை பிரச்னை காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டது. அங்கு எரிபொருள் நிரப்பினாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பறக்க முடியவில்லை. விமானத்தை பிரித்து கொண்டு செல்லலாமா என்பது கூட ஆலோசிக்கப்பட்டது.
ரூ.640 கோடி மதிப்புள்ள போர் விமானம், கடந்த மூன்று வாரங்களாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை சரி செய்ய பிரிட்டிஷ் கடற்படை பொறியாளர்கள் முயன்றாலும் எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், பிரிட்டன் நிபுணர்கள் குழு ஒன்று நாளை கேரளா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 25 பேர் கொண்டு இக்குழுவினர், விமானத்தை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளதுடன், அதனை இந்தியாவிலேயே சரி செய்ய முடியுமா அல்லது பிரிட்டன் கொண்டு சென்று சரி செய்வதா என முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தை சரி செய்வதற்கான முயற்சிகளுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



மேலும்
-
கஞ்சா கொள்முதலுக்கு ஒடிசா சென்ற வாலிபர்...கொலை:பணம் கேட்டு மிரட்டிய கும்பல் வெறிச்செயல்
-
இணைப்பு சாலை சீரமைக்க கோரிக்கை
-
செங்கை புதிய பேருந்து நிலைய பணிக்காக 3 ஏக்கர் குளம் மண் கொட்டி துார்ப்பு
-
தொழில்நுட்ப திறன் வளர்க்க ரத்தினத்தில் புதிய ஆய்வகம்
-
நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
-
தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா