நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

கோவை : கவுண்டம்பாளையம் பகுதியில், சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
கவுண்டம்பாளையம், ராமசாமி நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துனர் ஜோதிராஜ். இவர், நல்லாம்பாளையம் எருக் கம்பெனி பாலம் அருகே நேற்று காலை தனது, மாருதி 800 காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரில் இருந்து பெட்ரோல் கசிவதாக, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
உடனே, காரை சி.என்.ஜி., காஸூக்கு மாற்றினார். திடீரென காரின் முன் பக்கத்தில் தீப்பிடித்து புகை கிளம்பியது. இதைப்பார்த்த ஜோதிராஜ், காரில் இருந்து கீழே இறங்கி, கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
Advertisement
Advertisement