தொழில்நுட்ப திறன் வளர்க்க ரத்தினத்தில் புதிய ஆய்வகம்

கோவை: ஈச்சனாரி, ரத்தினம் கல்லுாரியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேக்ஓர்க்ஸ் எனும் ஒரு புதிய ஆய்வக அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. இதன் துவக்க விழாவுக்கு, ரத்தினம் கல்விக்குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமை வகித்தார்.
புதிய ஆய்வகத்தை தமிழ்நாடு ஸ்டார்ட்-அப்களின் திட்ட இயக்குனரும், முதன்மை நிர்வாக அதிகாரியுமான சிவராஜ் ராமநாதன் திறந்து வைத்தார். இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், தரவு அறிவியல் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, ரத்தினம் கல்விக்குழுமங்களில் உள்ள ஏ.ஐ.சி., ரைஸில் புதிய மாற்றத்தை உருவாக்குபவர்களையும், புதிய திறன்மிகு இளைஞர்களையும் கொண்டாடுவோம் என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கு நடந்தது.
ஐ.பி.எம்., நிறுவனத்தின் தொகுப்பு ஆலோசகர் இளமுருகு முத்தமிழ் செல்வன், ரத்தினம் கல்விக்குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில், செயல் அதிகாரி மாணிக்கம், தலைமை வணிக அதிகாரி நாகராஜ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!