சி.பி.ஐ., என மிரட்டி விஞ்ஞானியிடம் ரூ.1.29 கோடி மோசடி செய்த கும்பல் கைது

1

லக்னோ: ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம், சி.பி.ஐ., எனக்கூறி மோசடி ரூ.1.29 கோடி மோசடி செய்த கும்பலை உ.பி., போலீசார் கைது செய்தனர்.

கால்நடை ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் சுக்தேவ் நந்தி. இவரை தொடர்பு கொண்ட மர்ம கும்பல், தங்களை சி.பி.ஐ., எனக்கூறி அறிமுகம் செய்து கொண்டனர். பிறகு அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக கூறி, மிரட்டி 3 நாட்கள் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்தனர். அவர்களை மிரட்டி ரூ.1.29 கோடி மோசடி செய்துள்ளனர்.

பணத்தை இழந்த பிறகு தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுக்தேவ் நந்தி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷியாம், சுதீர், ரஜ்னீஸ் மற்றும் மகேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement