செஸ்: குகேஷ் 'ஷாக்'

ஜாக்ரெப்: கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது. உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான போட்டியில் குகேஷ், 14 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார்.
நேற்று 'பிளிட்ஸ்' (அதிவேகம்) முறையில் போட்டி நடந்தது. முதல் சுற்றில் குகேஷ், வெஸ்லேயிடம் (அமெரிக்கா) தோற்றார். அடுத்த இரு சுற்றிலும் நாடிர்பெக் (உஸ்பெகிஸ்தான்), ஜான் டுடாவிடம் (போலந்து) தோற்றார். 4வது சுற்றில் கார்ல்சனிடம் வீழ்ந்தார். நேற்று பங்கேற்ற 5 சுற்றிலும் தோற்றார் குகேஷ்.
பிரக்ஞானந்தா, 1ல் வென்று, 4ல் 'டிரா' செய்தார்.

Advertisement