கோப்பை வெல்லுமா திண்டுக்கல் * திருப்பூர் அணியுடன் பலப்பரீட்சை

திண்டுக்கல்: டி.என்.பி.எல்., பைனலில் இன்று திண்டுக்கல், திருப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., 'டி-20' தொடரின் 9வது சீசன் நடக்கிறது. திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் இன்று நடக்கும் பைனலில் திண்டுக்கல், சேப்பாக்கம் அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் திண்டுக்கல், 'பிளே ஆப்' சுற்றில் திருச்சி, வலிமையான சேப்பாக்கம் அணியை சாய்த்து, நான்காவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. பேட்டிங்கில் துவக்கத்தில் ஷிவம் சிங் (327 ரன்), கேப்டன் அஷ்வின் (296) கைகொடுக்கின்றனர். தகுதிச்சுற்று 2ல் ஒரே ஓவரில் 34 ரன் விளாசிய விமல் குமார் (230), பாபா இந்திரஜித் (178) மீண்டும் உதவலாம். பவுலிங்கில் அஷ்வின் (13 விக்.,), வருண் சக்ரவர்த்தி (10), பெரியசாமி (11) சாதித்தால் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வெல்லலாம்.
திருப்பூர் அணி லீக் சுற்றில் 7ல் 5 வெற்றி (2 தோல்வி) பெற்றது. தகுதிச்சுற்று 1ல் சேப்பாக்கத்தை வீழ்த்தி, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறியது. பேட்டிங்கில் துஷார் ரஹேஜா (411), சாத்விக் (275), ரஞ்சன் (146) நம்பிக்கை தருகின்றனர். பவுலிங்கில் கேப்டன் சாய் கிஷோர் (12), இசக்கிமுத்து (12), அனுபவ நடராஜன் (9) கைகொடுத்தால் முதல் கோப்பை வசப்படுத்தலாம்.
மேலும்
-
ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை
-
உண்மையான தொண்டருக்கு தலைவர் பதவி கொடுங்கள்' பா.ஜ., மேலிடத்திற்கு வைத்திலிங்கம் கோரிக்கை
-
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
-
மாஜி மீது வழக்கு பதிய கோர்ட் அதிரடி உத்தரவு
-
121 ஆண்டுகள் கடந்த பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி; சாதனையாளர்களை உருவாக்கி அசத்தல்
-
திருவட்டத்துறைக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை