பாலியல் புகாரில் கைதான  கோவை வக்கீல் 'சஸ்பெண்ட்'

கோவை : பாலியல் புகாரில் கைதான, கோவை வக்கீல் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கோவையை சேர்ந்த மாணவி ஒருவரிடம், 68 வயதான பிசியோதெரபிஸ்ட் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுதொடர்பாக, கோவையில் வக்கீலாக பணியாற்றி வரும், திண்டுக்கல் மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த கே.மனோஜ்பாண்டி,32, என்பவரை சந்தித்து, சட்ட ஆலோசனை கேட்க மாணவி சென்றார். வக்கீல் மனோஜ்பாண்டி, அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். புகாரின் பேரில், வக்கீல் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, பார் கவுன்சிலுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, மனோஜ்பாண்டியை ஓராண்டு 'சஸ்பெண்ட்' செய்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement