அரிச்சந்திர மகாராஜா கோவிலில் 85 ஆண்டுக்கு பின் கும்பாபிேஷகம்
புதுச்சேரி: கருவடிக்குப்பத்தில் சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சுவாமி கோவிலில், 85 ஆண்டுகளுக்கு பின், நாளை மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
கருவடிகுப்பத்தில் சித்தர்கள் வந்து தங்கியுள்ளனர். அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகில் சிறப்பு வாய்ந்த அரிச்சந்திர மகாராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த 1800ம் ஆண்டில் முதல் முறையாக கும்பாபிேஷகம் நடந்தது. அதன் பிறகு, 1940ம் ஆண்டு, இரண்டாவது கும்பாபிேஷகம் நடந்தது. அதன் பிறகு கும்பாபிேஷகம் நடக்கவில்லை.
இந்நிலையில், 85 ஆண்டுகளுக்கு பிறகு, கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. கோவிலில் உள்ள வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ரா மகரிஷி, மகாகால ருத்ர பைரவர், சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சுவாமிகளுக்கு, நாளை 7ம் தேதி, காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, சந்திரமதி அரிச்சந்திர சுவாமி அறக்கட்டளை மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மேலும்
-
பா.ஜ.,வை பார்த்து தி.மு.க.,வினருக்கு தூக்கம் போயிடுச்சு; நயினார் நாகேந்திரன்
-
5 மாதங்களில் 1,65,136 பேருக்கு நாய்க்கடி: 17 பேர் ரேபிஸ் நோய்க்கு பலி; கேரளாவில் ஷாக்
-
காலியான கல்லுாரி பணியிடங்கள்; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: சாடிய அன்புமணி
-
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்