சி.சி.ஐ., விசாரணையில் 3 சிமென்ட் நிறுவனங்கள்

புதுடில்லி:இடைத்தரகருடன் சேர்ந்து போட்டித் தன்மையை சீர் குலைக்க முயன்ற புகாரில், அல்ட்ராடெக், டால்மியா பாரத், ஸ்ரீதிக்விஜய் சிமென்ட்ஸ் நிறுவனங் கள், 5 முதல் 9 ஆண்டுகள் வரையிலான நிதிநிலை ஆவணங்களை சமர்ப்பிக்க, இந்திய போட்டி ஆணையமான சி.சி.ஐ., உத்தரவிட்டுள்ளது.



இந்நிறுவனங்கள், உமாகாந்த் அகர்வால் என்ற இடைத்தரகருடன் இணைந்து போட்டிக்கு
எதிரான ரகசிய கூட்டுச்சதியில் ஈடுபட்ட புகார் மீது விசாரணை நடத்தப்பட்டது. அதில்
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கை கள், இருப்புநிலை குறிப்புகள், லாப, நஷ்ட கணக்குகள்
உள்பட அனைத்து நிதி ஆவணங்களையும் எட்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சி.சி.ஐ.,
உத்தரவிட்டுள்ளது.


மேலும், விசாரணை அறிக்கைக்கு முறையான பதில்களுடன், ஐந்து ஆண்டுகளின் வருமான வரி பதிவுகளை சமர்ப்பிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

Advertisement