சிலிண்டர் வெடித்து 5 குடிசை நாசம்

ஜல்லடியன்பேட்டை, சென்னை, ஜல்லடியன்பேட்டை கோவலன் தெருவில், வட மாநில தொழிலாளர்கள் சிலர், குடிசை வீட்டில் தங்கியுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்தும் 'காஸ்' சிலிண்டர், நேற்று இரவு 8:00 மணிக்கு திடீரென வெடித்து, தீப்பிடித்து எரிந்தது. இதில் குடிசையில் தீப்பற்றி, அருகில் இருந்த இரு குடிசை வீடுகள், இரு ஓட்டு வீடுகளிலும் தீப்பிடித்தன.

அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிய துவங்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மக்கள் தீ பரவாமல் அணைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மூன்று இளைஞர்களையும் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement