சீனியர் ஆடவர் வாலிபால் எஸ்.ஆர்.எம்., - ஐ.ஓ.பி., அணிகள் அரையிறுதிக்கு தகுதி

சென்னை, மாநில அளவில் நடக்கும் சீனியர் வாலிபால் போட்டியில், ஆடவர் பிரிவில் எஸ்.ஆர்.எம்., மற்றும் ஐ.ஓ.பி., அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில், மாநில அளவில் சீனியர் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு, 71வது வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர், சென்னையில் நடந்து வருகிறது.

இதில், 24 அணிகள் மோதுகின்றன. ஆடவருக்கான காலிறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது.

இதன் முதல் காலிறுதி போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 17, 16 - 25, 25 - 14, 25 - 14 என்ற செட் புள்ளிகளில், எதிர்த்து விளையாடிய சென்னை சுங்கத்துறை அணியை வீழ்த்தி, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது போட்டியில், ஐ.ஓ.பி., அணி, 25 - 17, 25 - 23, 25 - 18 என்ற செட் புள்ளிகளில், இந்தியன் வங்கி அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

Advertisement