கிளப்களுக்கு இடையே பேட்மிண்டன் போட்டி இன்று துவக்கம்
சென்னை, சென்னை மாவட்ட அளவில் புதிய கிளப்களுக்கு இடையிலான பேட்மிண்டன் சாம்பியன் போட்டி இன்று துவங்குகிறது.
'டீம் 16 ஸ்போர்ட்ஸ் கிளப்' சார்பில், சென்னை மாவட்ட அளவில், பேட்மிண்டன் புதிய கிளப் மற்றும் கிளப் சாரா பேட்மிண்டன் வீரர், வீராங்கனையருக்கு இடையிலான, பேட்மிண்டன் போட்டி சென்னை, நீலாங்கரை அன்லீட்ச் பேட்மிண்டன் மைதானத்தில் இன்று துவங்குகிறது.
இதில், சென்னை மாவட்டத்தின் 100க்கும் அதிகமான அணிகள் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளன.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனையர், மாநில, தேசிய போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்கக் கூடாது.
இந்தப் போட்டி, 'லீக் கம் நாக் அவுட்' முறையில் நடக்கிறது. இதற்காக, அந்தக் கிளப் ஒற்றையர் பிரிவு போட்டிக்கு 700 ரூபாயும், இரட்டையர் பிரிவு போட்டிக்கு 1,100 ரூபாய் முன்பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
**
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை
-
வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்
-
வியூகத்தை மாற்றிய குருவிகள் புது ரூட்டில் வருகிறது தங்கம்
Advertisement
Advertisement