கத்தியுடன் சுற்றி திரிந்த இருவர் கைது

கொடுங்கையூர், கொடுங்கையூரில், கத்தியுடன் சுற்றித்திரிந்த, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கொடுங்கையூர், திருவள்ளுவர் சாலையில், கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, கத்தியுடன் சுற்றித் திரிந்த கொடுங்கையூர், திருவள்ளுவர் சாலையை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வினேஷ், 32, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சின்னராஜ், 28, ஆகிய இருவரை, நேற்று கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement