சென்றாய பெருமாள் கோவில் திருவிழா
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, அகரம், குடிமேனஹள்ளி கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாயபெருமாள் சுவாமி கோவில் திருவிழா நேற்று நடந்தது.
7 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இத்திருவிழாவில், வேட்டியம்பட்டி, கிட்டம்பட்டி, பாப்பாரப்பட்டி, பெரிய மோட்டூர், அவதானப்பட்டி, வெங்கிளிகானாப்பள்ளி, பழைபேட்டை, புங்கம்பட்டி, காட்டுக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் குலதெய்வ கோவில் இது. சுவாமிக்கு விடப்பட்ட பூர்வீகமான கோவில் காளை நேற்று, கிருஷ்ணகிரி, கிட்டம்பட்டியிலிருந்து அழைத்து வரப்பட்டது.
அப்போது, குடிமேனஹள்ளி கிராமத்திலிருந்த பக்தர்கள், ஈர உடையுடன், 100க்கும் மேற்பட்டோர் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற, வீதிகளில் படுத்து கிடக்க, அவர்கள் மீது கோவில் காளை கால் வைத்தும், தாண்டியும் சென்றது.
அப்போது பக்தர்கள், 'கோவிந்தா, கோவிந்தா' என கோஷமிட்டனர். திருவிழாவில், 20,000 பக்தர்கள் சுவாமி தரினம் செய்தனர். பர்கூர் சப் டிவிசனுக்கு உட்பட்ட, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
மேலும்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்