பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் கிணறு இடித்து அகற்றம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், தண்டரை புதுச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த பயன்பாடற்ற குடிநீர் கிணறு இடித்து சமன்படுத்தப்பட்டது.
அச்சிறுபாக்கம் அடுத்த தண்டரை புதுச்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 25க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு, 40 ஆண்டுகளுக்கு முன், மாணவர்கள் பயன்பெறும் வகையில், குடிநீர் கிணறு வெட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.
நாளடைவில், குடிநீர் கிணறு பயன்பாடு இன்றி, பாழடைந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து நேற்று, ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிணறு இடித்து அகற்றப்பட்டு மண் கொட்டி சமன்படுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
Advertisement
Advertisement