ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள் வரும் 9ல் கோவை வருகை

கோவை : கோவை வரும் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா சுவாமிகள், சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவத்தை முன்னிட்டு, ராம்நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் கோவிலில், 65 நாட்கள் தங்கி, பூஜை நடத்துகிறார்.
சட்டீஸ்கர் மாநிலம் விலாஸ்புரியில் உள்ள ஸ்ரீ சக்கர மஹா மேரு பீடத்தின் ஆட்சியாளரும், துறவியுமான ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா சுவாமிகள், 9ம் தேதி கோவை வருகை தருகிறார்.
கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில் தலைவர் நாகசுப்ரமணியம் கூறியதாவது:
சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவத்தை முன்னிட்டு, ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா சுவாமிகள், 9ம் தேதி கோவை வருகிறார். ராமர் கோவிலில் தங்கி, 65 நாட்கள் வ்யாச பூஜையுடன் கூடிய வ்ரத பூஜை நடத்த உள்ளார். ஜூலை 10 முதல் செப்., 7 வரை சிறப்பு பூஜை, வேத சொற்பொழிவு, கர்நாடக இசைக்கச்சேரிகள் உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கோவை வரும் சுவாமிகளுக்கு, 9ம் தேதி பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படும். சுவாமிகள் இங்கு தங்கியுள்ள காலத்தில் காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜை மேற்கொள்வார். சாதுர்மாஸ்ய மாதத்தில் சன்னியாசிகளிடம் ஆசிர்வாதம் பெறும்போது வாழ்வு சிறக்கும். இக்காலகட்டத்தில் மகாருத்ரம் வழிபாடும் நடைபெறும். உலக நலம் வேண்டி இந்த பூஜைகளை சுவாமி மேற்கொள்ள உள்ளார். மளிகை பொருட்கள், பழம், காய்கறிகள், பூ, பூஜை திரவியங்கள் தானமாக வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
திருக்கோவில் காரியதரிசி விஸ்வநாதன், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க நிர்வாகி பரசுராமன், கோவில் உறுப்பினர் ஜெகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு