அரையிறுதியில் ரியல் மாட்ரிட்: கிளப் உலக கோப்பை கால்பந்தில்

கிழக்கு ரூதர்போர்டு: கிளப் உலக கோப்பை கால்பந்து அரையிறதிக்கு ரியல் மாட்ரிட் அணி முன்னேறியது.
அமெரிக்காவில், 'பிபா' கிளப் உலக கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. கிழக்கு ரூதர்போர்டில் நடந்த காலிறுதியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), போருசியா டார்ட்மண்ட் (ஜெர்மனி) அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ரியல் மாட்ரிட் அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. மாட்ரிட் அணி சார்பில் கான்சலோ கார்சியா (10வது நிமிடம்), பிரான்சிஸ்கோ கார்சியா (20வது), எம்பாப்வே (90+4வது) தலா ஒரு கோல் அடித்தனர். டார்ட்மண்ட் அணிக்கு மேக்சிமிலியன் பீயர் (90+3வது நிமிடம்), யாடலி குய்ராசி (90+8வது) ஆறுதல் தந்தனர்.
அட்லாண்டாவில் நடந்த மற்றொரு காலிறுதியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிரான்ஸ்) அணி 2-0 என பேயர்ன் முனிக் (ஜெர்மனி) அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
அரையிறுதியில் (ஜூலை 9, கிழக்கு ரூதர்போர்டு) ரியல் மாட்ரிட், பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிகள் விளையாடுகின்றன.
மேலும்
-
சாலை பணியில் சமாதியான குடிநீர் 'பம்ப்' ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் அடாவடி
-
நகை திருட்டு : 5 பேர் கைது
-
மொகரம் பண்டிகை கொடியேற்றம்
-
ராஜகோபுரத்தில் இரும்புச்சாரம்
-
போலீசாருக்கு இரண்டு ஷிப்ட்டுக்கு பதிலாக... 3 ஷிப்ட் முறை! பணிச்சுமையை குறைக்க மாநில அரசு முடிவு
-
சிந்தலகுப்பம் குளத்தை ஒட்டிய சாலையில் கழிவுகள் குவிப்பு