சிந்தலகுப்பம் குளத்தை ஒட்டிய சாலையில் கழிவுகள் குவிப்பு

கும்மிடிப்பூண்டி,:சிந்தலகுப்பம் குளத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் குவிக்கப்பட்டு வரும் கழிவுகளால், குளம் மாசடைந்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை ஊராட்சியில் சிந்தலகுப்பம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம்,5 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.

அப்பகுதியை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் உணவகங்களின் தினசரி கழிவுநீர் மற்றும் குப்பை கழிவுகள், குளத்தை ஒட்டிய இணைப்பு சாலையோரம் குவிக்கப்பட்டு வருகின்றன.

இதனால், குளம் மாசடைந்து, ஆகாயத் தாமரை படர்ந்து, துார்ந்து போனதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, குளத்தை ஒட்டிய சாலையில் கழிவுகள் குவிப்பதை தடுத்து, தடுப்புச்சுவர் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.

இதற்கு, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement