ஹர்விந்தர் சிங் 'ஹாட்ரிக்' தங்கம்: ஆசிய பாரா வில்வித்தையில்

பீஜிங்: ஆசிய பாரா வில்வித்தையில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார்.

சீனாவின் பீஜிங் நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்களுக்கான ரிகர்வ் ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், தாய்லாந்தின் நெட்சிரி மோதினர்.


இதில் ஹர்விந்தர் 7-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, இத்தொடரில் இவர் கைப்பற்றிய 3வது தங்கம். ஏற்கனவே ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் தங்கம் வென்றிருந்தார்.
இத்தொடரில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என, 9 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தை சீனா (10 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்) தட்டிச் சென்றது.

Advertisement