திருத்தணி கோவிலுக்கு ஜெனரேட்டர் வழங்கல்

திருத்தணி,:முருகன் கோவிலுக்கு எஸ்.பி.ஐ., வங்கி சார்பில், புதிதாக ஜெனரேட்டர் வழங்கப்பட்டது.

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால், பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக, திருத்தணி எஸ்.பி.ஐ., வங்கி சார்பில், 18.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜெனரேட்டர், கோவில் இணை ஆணையர் ரமணியிடம், எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும், ஓராண்டுக்கு பராமரிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement