இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு; விருப்பமில்லாதவர்கள் விலகல்

கோவை; கோவையில், நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) இடைநிலை ஆசிரியர்களுக்கான நேரடி நியமனம், பணி நிரவல் மற்றும் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு, 3ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று முன் தினம், ஒன்றியத்துக்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. எஸ்.எஸ்.குளம், தொண்டாமுத்துார், காரமடை, சூலுார் உள்ளிட்ட வட்டாரங்களில் ஆறு பணியிடங்கள், அன்னுார் மற்றும் சூலுார் வட்டாரங்களில் உருது மொழி ஆசிரியர்களுக்கான இரண்டு பணியிடங்கள் என, எட்டு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

இப்பணியிடங்களுக்கு, 174 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 65 பேர் விருப்பமில்லை எனத் தெரிவித்து விலகினர். அதேசமயம், 99 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.

Advertisement