14 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா ஆசாமிகள் கைது

திருப்பூர்; ஜார்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து கேரள மாநிலம், எர்ணாகுளம் வரை செல்ல கூடிய தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தல் குறித்த தகவல் திருப்பூர் ரயில்வே போலீஸ் மற்றும் மது விலக்கு போலீசாருக்கு கிடைத்தது.

நேற்று முன்தினம் இரவு கண்காணித்தனர். பொது பெட்டியில் சந்தேகப்படும் விதமாக இருந்த, இருவரிடம் விசாரித்தனர். அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சுபாஷீஷ், 28, மாயாவதி மாலிக்கோ, 22; அவர்களது பேக்கை சோதனையிட்டபோது, 14 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. கேரளாவுக்கு இவை கடத்திச் செல்லப்படுவது தெரிந்தது. கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து, இவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement