பைக் மோதி மூதாட்டி பலி

கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கவுண்டம்பாளையம் பகு-தியை சேர்ந்த கோபால் மனைவி ராமாயி, 80; இவர், நேற்று முன்தினம் கரூர்-திருச்சி சாலை ஆசிரியர் காலனி பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக கரூர் புலியூரை சேர்ந்த கண்ணன், 19, என்பவர் ஓட்டி சென்ற, 'பஜாஜ் பல்சர்' பைக், ராமாயி மீது மோதியது. அதில், தலையில் படுகாயமடைந்த ராமாயி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, ராமாயி மகன் மதியழகன், 56, கொடுத்த புகார்படி பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement