'லிங்க்' அனுப்பி பண மோசடி; சென்னை ஆசாமி சிக்கினார்
திருப்பூர்; திருப்பூரை சேர்ந்தவர் தனபாக்கியம், 40. கிரெடிட் கார்டு பயன்படுத்தி வந்தார். கடந்த, 2023ல் ஒருவர், தனபாக்கியத்தை போனில் அழைத்து கிரெடிட் கார்டில் பெற்ற தொகைக்காக, 88 ஆயிரத்து, 625 ரூபாயை செலுத்துமாறு கூறினார்.
இதை நம்பிய தனபாக்கியம், அவர் கொடுத்த லிங்க் மூலம், பணத்தை செலுத்தினார். சிறிது நேரத்தில் தனபாக்கியத்தின் கார்டிலிருந்து, 88 ஆயிரத்து, 625 ரூபாய் எடுக்கப்பட்டது. அது வங்கிக்கணக்குக்கு செல்லவில்லை என்பது தெரிந்தது.
தனபாக்கியம் அளித்த புகாரை, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். இருவர் கைவரிசை காட்டியது தெரிந்தது. ஏற்கனவே, மாரியப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னையை சேர்ந்த தீபக், 30 என்பவரை கைது செய்து, மொபைல் போன் மற்றும் சிம் கார்டை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஆன்லைன்' சூதாட்டத்தை கட்டுப்படுத்த மசோதா தயார்; சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய அரசு முடிவு
-
சைகை மொழி பயன்பாடு அரசு துறைகளில் அமலுக்கு வருமா?
-
கார் மீது பஸ் மோதல் 3 பேர் பரிதாப பலி
-
ஆதரவற்றோருக்கு 'ஆபத்பாந்தவன்'
-
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
-
கல்வி திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
Advertisement
Advertisement