அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி அருகே குலநாத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பள்ளி அருகே கண்மாய் அமைந்துள்ளதால் ஆபத்தான நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement