இலவச மருத்துவ முகாம் 

புதுச்சேரி: லாஸ்பேட்டை நாதன் அறக்கட்டளை, இன்னர் வீல் கிளப் ஆஃப் பாண்டிச்சேரி காஸ்மாஸ் மற்றும் பிம்ஸ் மருத்துவமனை சார்பில் இ.சி.ஆர். சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

முகாமை நாதன் அறக்கட்டளை நிறுவனர் சாமிநாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

முகாமில், டாக்டர்கள் அனிதா மற்றும் வைஷாலி தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள், பல், எலும்பு, மூட்டு மருத்துவம், கண், தோல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இ.சி.ஜி. மகப்பேறு மருத்துவம் மற்றும் சமூக மருத்துவத்திற்கான அனைத்து சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

மருத்துவ முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

முகாமில்நாதன் அறக்கட்டளை நிர்வாகிகள் வெங்கடேஷ், நடராஜ், சுரேஷ்குமார், சத்யா, முருகன், பாலா, சுப்பிரமணி, மடுவுபேட் சலவையாளர் நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் சுப்ரமணியன், பழனி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement